கூட்டணி ஆட்சியெனப் பேசுவதை காங். தலைமை விரும்பவில்லை- தி.மு.க.

கூட்டணி ஆட்சியெனப் பேசுவதை காங். தலைமை விரும்பவில்லை- தி.மு.க.
Published on

தமிழக காங்கிரஸ் கட்சியில் சிலர் கூட்டணி ஆட்சி வேண்டுமெனப் பேசிவருவதை அந்தக் கட்சியின் தலைமை விரும்பவில்லை என்று தி.மு.க. கூறியுள்ளது. 

பிப்ரவரி முதல் நாளிலிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குமானதி.மு.க. நட்சத்திரப் பேச்சாளர்களின் பிரச்சாரம் தொடங்குவதை முன்னிட்டு, அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மருத்துவர் அணி நிர்வாகிள் எழிலன், கனிமொழி சோமு ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இளங்கோவன் இதைக் கூறினார். 

”கடந்த 2004ஆம்ஆண்டு முதல் காங்கிரஸ் எங்களோடு கூட்டணியில் இருக்கிறது. எந்தத் தேர்தலிலும் அவர்கள்ஆட்சியில் பங்கு எனக் கேட்டதில்லை. 2006ஆம்ஆண்டில் எங்கள் (எம்.எல்.ஏ.) எண்ணிக்கை குறைவாக இருந்தபோதுகூட வெளியிலிருந்து ஆதரித்தார்களே தவிர, அப்போதும் அவர்கள் இப்படிக் கேட்டதில்லை. அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைமையோ மாநிலத் தலைமையோ இப்படிப் பேசுவதில்லை. அப்படிப் பேசும்போது எங்கள் தலைவருடன் அவர்கள் பேசிக்கொள்வார். மற்றவர்கள் பேசுவதைப் பற்றி நாங்கள் எதுவும் கூறமுடியாது.” என்றும் அவர் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com