அன்புமணி தலைமையிலான பா.ம.க.வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துவிட்ட நிலையில், அவரின் தந்தை இராமதாசு அடுத்து என்ன செய்யப்போகிறார், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என கேள்விகள் தொடர்கின்றன.
தி.மு.க.வுடன் கைகோப்பதாக முதலில் வந்த செய்திகளில் பின்னடைவு ஏற்பட்டது.
அடுத்து, விஜய்யின் த.வெ.க. அணியில் இணைவார் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று அவர் தன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், ”நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை. உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது அவருடைய தலைமையிலான பா.ம.க.வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.