கேஸ் - 25 நாள்களுக்குப் பிறகுதான் பதிய முடியும்!

சமையல் எரிவாயு சிலிண்டர்
சமையல் எரிவாயு சிலிண்டர்
Published on

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடரும் நிலையில், புதிய சிலிண்டருக்குப் பதிவுசெய்ய இனி 25 நாள்கள் காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

நாளை மே மாதம் முதல் தேதியிலிருந்து இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும் என பெட்ரோலியத் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இப்போதுவரை நகர்ப்புறத்தில் 21 நாள்களுக்குப் பிறகு புதிய சிலிண்டருக்குப் பதிவு செய்யலாம்.

இதுவே கிராமப்புறத்தில் 45 நாள்கள் என்பது தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பதிவுசெய்ய முயன்றால், பதிவுக் கணினி தானாகவே பதிவை நிராகரித்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com