கொள்கைக் கூட்டணி எப்போது? - கம்யூனிஸ்ட் எம்.பி.

கொள்கைக் கூட்டணி எப்போது? - கம்யூனிஸ்ட் எம்.பி.
Published on

கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கைக் கூட்டணி எப்போது சாத்தியம் ஆகும் என்று திருப்பூர் தொகுதி எம்.பி. சுப்பராயன் என ஒரு விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு :  

” கம்யூனிஸ்ட்டுகளுக்கு தொகுதி எண்ணிக்கை குறைந்துவிட்டதே என்ற ஆழமான கவலை கட்சி அணிகளுக்கு இருக்கின்றது!

சமூக ஊடகங்களில்கூட, பலதரப்பட்ட மக்கட் பகுதியினரும், ஊடக நண்பர்களும் அதே கவலையைத் தெரிவித்துள்ளனர்!

அவற்றை எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் கவனத்தில் கொண்டுள்ளனர்!

பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் மனித குலத்தை பிளவுபடுத்தி, ஒன்றுடன் மற்றொன்றை வெறுப்புடன் பகைத்து மோதவிட்டுக் குளிர்காயும் தீயசக்தி!' மனிதப் பிறப்பிலேயே 'வர்ணாஸ்ரம' விசத்தைக் கக்கக் கற்றுக் கொடுத்த மாபாவிகள்!

மன்னிக்கக்கூடாத விசமக் கருத்தை மக்களிடம் இடைவிடாது விதைப்பவர்கள்!

இந்தத் தீய சக்திகளைத் தமிழ்நாட்டில் தோற்கடிக்க வேண்டும் என்ற அரசியல் காரணத்தால், இணங்கி தொகுதி உடன்பாடு கண்டு இணைந்து செயல்படுகிறார்கள் கம்யூனிஸ்டுகள்!

கேரளத்தைப் போல், திட்டத்தின் அடிப்படையிலான கொள்கைபூர்வமான ஒரு கூட்டணியின் அரசியல் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது!

காலம் கனிந்து வருகிறபோது அந்த அரசியல் தேவைகள் நிறைவேறும்!

இன்று, தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில், ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியை முறியடித்திட, உரிய பணிகளை, விரைவாக மேற்கொள்ள வேண்டுகிறோம்!" என்று கே. சுப்பராயன் தன் சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com