சென்னையில் இன்று காலமான கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல், ஈஞ்சம்பாக்கம் இல்லத்திலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. அவரின் தந்தை கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் முத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரின் சிற்றன்னை தயாளு அம்மாளின் மகனும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அவரின் சகோதரி செல்வி, முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி, தயாநிதி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.
முன்னதாக, காலையில் தகவல் அறிந்ததும் ஸ்டாலின் ஈஞ்சம்பாக்கத்துக்குச் சென்று தன் அண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் உடன்சென்றனர்.
மு.க.முத்துவின் உடல் இன்று மாலை 5 மணிவரை பொது அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து பெசண்ட்நகர் மின்மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்படும் என தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.