கோவை சிறுமி கொலை- உடலைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர்!

Published on

கோவையில் பத்து வயது சிறுமி கொலை செய்யப்பட்ட கொடூரத்தில் பக்கத்து வீட்டுக்காரனையும் இன்னொருவனையும் போலீசார் கைதுசெய்துள்ளனர். 

டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் கோவைக்கு விரைந்து நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். 

சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்துவந்த உறவினர்களிடம் அரசு அதிகாரிகள் பேசியதில் அவர்கள் சமாதானம் அடைந்து பின்னர் உடலைப் பெற்றுக்கொண்டனர். 

இதனிடையே, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com