சடலமாக மீட்கப்பட்ட செவிலியர் மாணவி- அண்ணாமலை அறிக்கை!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பயின்று வரும் மாணவி, வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், அருகிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து தன் சமூக ஊடகப் பக்கங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”மாணவியின் பெற்றோர்கள், மணிகண்டன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மணிகண்டன் என்ற நபர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக ஒன்றிய செயலாளர் தவ பாஞ்சாலன் என்பவரின் உறவினர் என்பதால், காவல்துறைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். 

”காவல்துறை எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், உண்மைக் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்துவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com