தமிழ் நாடு
தமிழக சட்டப்பேரவையின் வரும் ஆண்டில் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 26ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை கோட்டையில் அவைத்தலைவர் அப்பாவு சற்றுமுன் ஊடகத்தினரிடம் இதைத் தெரிவித்தார்.
அன்றைய நாள் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டில் ஆளுநர் தன் உரையில் முதல் பக்கத்தையும் கடைசிப் பக்கத்தையும் மட்டுமே படித்தார்; இந்த ஆண்டில் முழுமையாகப் படிப்பார் என்று நம்புகிறோம் என்றும் அப்பாவு கூறினார்.
நடப்பாண்டில் தேர்தல் காரணமாக சட்டப்பேரவைக் கூட்டங்கள் குறைவான நாட்களே நடத்தப்பட்டன என்றும் ஆனாலும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது என்றும் அவரே கூறிக்கொண்டார்.