டெல்டா காய்ந்த நெல் வயல்கள்
டெல்டா காய்ந்த நெல் வயல்கள்(கோப்பு படம்)

சம்பா நெல்லைக் காக்க காவிரியில் நீர் திறக்கவேண்டும் - விவசாயிகள் சங்கம் அழுத்தம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் காய்ந்து வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களைப் பாதுகாத்திட உடன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில்,

“காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு சீராக பெய்யாததால், ஆற்றுப்பாசனத்தை மட்டுமே நம்பி சம்பா, தாளடி பயிர் செய்துள்ள நெற்பயிர்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தண்ணீரின்றி தற்போது காய்ந்து வருகிறது. நீர்மட்டம் குறைந்ததால் மேட்டூர் அணை முன்கூட்டியே மூடப்பட்ட நிலையில் அவ்வப்போது பெய்த மழையினால் இதுவரை பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வந்தனர். தற்போது கதிர்வரும் நிலையில் உள்ள பயிர்கள் உட்பட அனைத்து நெற்பயிர்களும் காய்ந்து வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்தப் பயிர்களைப் பாதுகாப்பதற்கு தற்போது தண்ணீர் மிக, மிக அவசியமானது. எனவே, மேட்டூர் அணையில் 72 அடி வரை தண்ணீர் உள்ள சூழலில் காய்ந்து வரும் நெற்பயிர்களை பாதுகாப்பதற்கு தேவையான அளவிற்கு உடனடியாக மேட்டூர் அணையை திறந்து காய்ந்து வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களைப் பாதுகாத்திட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.” என்று சாமி. நடராஜன் தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com