சயாம் பர்மா ரயில் பாதை
சயாம் பர்மா ரயில் பாதை

சயாம்- பர்மா தியாகிகளுக்கு தாய்லாந்தில் நடுகல்- தமிழக அரசு பங்கேற்பு!

தாய்லாந்தின் சயாம்- பர்மாவுக்கு இடையே தொடர்வண்டிப் பாதை அமைப்பதற்காக இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தமிழர்கள். 15 மாதங்களில் முடிக்கப்பட்ட அந்த ரயில்பாதைத் திட்டத்தில் இறந்தவர்கள், கொல்லப்பட்டவர்களின் கல்லறை தாய்லாந்து நாட்டில் காஞ்சனபுரியில் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக தமிழ் மரபுப்படி நடுகல் ஒன்றை அமைக்கவேண்டும் என அவர்களின் வம்சாவளியினரும் புலம்பெயர் தமிழர்களும் வலியுறுத்தி வந்தனர். 

அதன்படி, நடுகல் அமைப்பதற்காக தமிழக அரசின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாய்லாந்தின் காஞ்சனபுரியில் நடுகல் அமைப்பு விழா வரும் மே 1ஆம் தேதி நடைபெறுகிறது. 

அதில் கலந்துகொள்ள வருமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவரால் கலந்துகொள்ள இயலாது எனவும், அவருக்குப் பதிலாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

விழாவில் பங்கேற்பதற்காகச் செல்லும் அமைச்சர் சிவசங்கர், இன்று முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com