சர்ச்சைக்கு உள்ளான கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!

சர்ச்சைக்கு உள்ளான கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!
Published on

மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டதை முன்னிட்டு, இங்கு காவல்துறையுடன் கல்வித் துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அம்பலம் ஆகியுள்ளது. 

இதில், கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், இடதுசாரி கட்சிகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டங்களில் கலந்துகொண்ட மாணவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு, அதன் விவரம் கேட்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் கல்விச் சூழலில், நீட்டுக்கு எதிராக மாநில அரசும் குரல்கொடுத்துவரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஆளும் கட்சி இப்படி நடவடிக்கையில் ஈடுபட்டது அரசை ஆதரிக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

மேலும், எழுத்தாளர்கள், சமூக அக்கறையாளர்கள் பலரும் கல்லூரிக் கல்வி இயக்குநரின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com