சித்தராமையாவுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

சித்தராமையா - மு.க.ஸ்டாலின்
சித்தராமையா - மு.க.ஸ்டாலின்
Published on

ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக் குழு அறிக்கையின் முதற்பாகத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு :

”ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக் குழு அறிக்கையின் முதற்பாகம் குறித்த தங்களது வரவேற்புக்கு நன்றி, மாண்புமிகு சித்தராமையா அவர்களே.

எங்களது முன்னெடுப்புக்கான தங்களது அறிவார்ந்த ஆதரவையும், கூட்டாட்சிக் கருத்தியலைப் புதுப்பிக்கும் முயற்சி கூட்டு முயற்சியாக அமைய வேண்டும் எனத் தாங்கள் அங்கீகரித்திருப்பதையும் நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.

“பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் குடியரசின் ஒற்றுமையை ஒற்றைத்தன்மை கொண்டு நிலைக்கச் செய்ய முடியாது, அரசியலமைப்பின் வழியிலான நம்பகத்தன்மை மூலமே அதனைச் செய்ய இயலும்” எனத் தாங்கள் தெரிவித்திருக்கும் கருத்து மிகச் சரியானது என ஆமோதிக்கிறேன்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com