மக்களின் வாழ்க்கை ஒன்றும் சினிமா இல்லை, சீன் காட்டுவதற்கு என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாகச் சாடியுள்ளார்.
கடலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
“ நாங்கள் தொகுதிப் போகிறோம். அடிப்படை வேலைகள்கூட ஆரம்பிக்கவில்லை. டெண்டர் விடப்படவில்லை. இது ஒன்றும் சினிமா இல்லை... ரீல்ஸ் போடவும் சீன் காட்டவும் வெறும் போட்டோ ஷூட் இல்லை. பல கோடி மக்களின் வாழ்வாதாரம்... இதை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.” என்றார் அவர்.
“இன்றுவரை காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதாக கர்நாடகம் துணிவாகச் சொல்கிறது. நம் அரசு என்ன செய்கிறது? ஒரு டன் அரிசி 15 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஜூலை கடைசி ஆகிவிட்டது. இன்னும் மழை வரவில்லை. எல்நினோ வரப்போகிறது. அரசு இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும். சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் அழுது சீன் ஓட்டுவது இல்லை.” என்றும் பிரேமலதா கூறினார்.
லாக்கப் மரணங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.