சின்னத்திரை சீரியல் போல கைதிகள் தப்பியோட்டம்- எடப்பாடி கிண்டல்

Published on: 

கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது; இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர், 

” “வெற்றி ஆட்சி சாதனை மலரில்” சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் கடத்தல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடன்கள் வரிசையில் இதுவும் முக்கிய தலைப்பாக வைக்கலாம்.

தேனி, புழல், சேலம் என ஒவ்வொரு முறை சிறைக்கைதிகள் தப்பி ஓடும் போதும் ஒரு ஒரு செய்தி வருகிறது, “சிறைத் துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம்”, “கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிற்க வைக்கிறோம்” என்றெல்லாம், இன்று கூட “சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் செய்தி வெளியிட்ட சில மணித் துளிகளில் கோவை சிறையில் கைதி தப்பியோடிய கேவலம் அரங்கேறியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

” மொத்தத்தில், இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால், “வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும்.

அது எப்படி கைதிகளால் , சிறையில் இருந்து இவ்வளவு எளிதாக தப்பிக்க முடிகிறது?

இது போன்ற கடுங்குற்றவாளிகள் , தப்பித்துச் சென்று என்ன என்ன குற்றங்களை செய்வார்கள் என நினைத்தாலே பதறுகிறது,

சிறைச்சாலையை கூட பாதுக்காப்பாக வைக்க முடியவில்லை என்றால் எப்படி இந்த ஆட்சி தங்களைக் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்?

அறிக்கை மூலம் அதிகாரிகளை முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் தங்களது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படக்கூடாது என்று அறிவுருத்தும் தவெக கூட்டணி அரசின் முதல்வர் திரு. ஜோசப் விஜய் எப்போது தனது அறிக்கையில் கூறியுள்ளவாறு தனது முதல்வர் பணிகளை மேற்கொள்ளப்போகிறார்?” என்று எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.