சின்னம்மை பரவல் குறித்து எச்சரிக்கை!

Minister Subramanian
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Published on

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ. 9 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மருத்துவம் - நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சைத் துறையில் சிறப்பு உயர்திறன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இதைத் திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார்.

இந்நிகழ்வுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், வெயில் தாக்கம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, இது தொடர்பாக நேற்று பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

“அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் இது தொடர்பாக கண்காணித்து வருகிறார்கள். பொதுவாக சின்னம்மை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அக்குழந்தைகள் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெயில் தாக்கம் அதிக்கரிக்கும்போது அதனை தடுப்பதற்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது.” என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com