இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த முத்தரசன் பொறுப்புக் காலம் முடிவடைந்த நிலையில், புதிய செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் இதற்கான தேர்தல் நடைபெற்றது. ஏற்கெனவே மாநிலத் துணைச்செயலாளராகப் பணியாற்றிய மு.வீரபாண்டியன் புதிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சேலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மாநில மாநாட்டில் பிரதிநிதிகள் கூட்டம் மாலைவரை நீண்ட நிலையில், மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்வு மட்டும் நடைபெற்றது. மாநில நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
முன்னர் தா.பாண்டியன் காலத்துக்குப் பின்னர் மாநில மாநாடு அல்லாமல், தனியாக ஒரு கூட்டத்தில் மீண்டும் இந்த முறை மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.