தமிழ் நாடு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தன் தொகுதியில் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.
அனிதா அச்சீவர்ஸ் அகடமியின் சார்பில் அங்கு பொங்கல் வைக்கப்பட்டு முதலமைச்சரால் பரிசுகளும் வழங்கப்பட்டன.
சிறார்களின் சிலம்பாட்டமும் நடைபெற்றது. அப்போது, ஒரு சிறுவனின் கையிலிருந்து சிலம்புக் கம்பை வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்தானும் கம்பு சுழற்றினார்.
இதை சுற்றியிருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர்.