தமிழ் நாடு

தி.மு.க. மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் அவதூறுப் பேச்சுக்காக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆளுநர் இரவியைப் பற்றியும் நடிகை குஷ்புவைப் பற்றியும் ஆபாசமாகப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், ஆபாசமாகப் பேசிய கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் தண்டத்தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.