உழைப்பாளி மக்களுக்கு எதிராகப் பேசுவதையே நா.த.க. தலைவர் சீமான் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் 100 நாள் வேலை நடந்த ஒரு இடத்திற்காவது அவர் சென்று வந்ததுண்டா? அங்கு முறையான ஆய்வை மேற்கொண்டாரா?” என்றும் அவர் சீமானைக் கேட்டுள்ளார்.
”வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்வது என்ற முறையில் தான் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற புளுத்துப்போன புளுகை மீண்டும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியினரின் குரலையே அவர் எதிரொலித்து இருக்கிறார். அவரது இத்தகையப் பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றும் சண்முகம்தன் சமூக ஊடகப் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.