தெலுங்குப் பெண்கள் உட்பட அந்த மொழி பேசும் மக்களை மிகவும் இழிவாகப் பேசிய நடிகை கஸ்தூரி சிறையில் அடைக்கப்பட்டார். முன்பிணை கோரிய அவரின் மனு தள்ளுபடியானதால் அவர் காவல்துறையிடம் பிடிபட்டார்.
கடந்த ஞாயிறு ஐதராபாத்தில் கைதுசெய்யப்பட்ட கஸ்தூரி, விசாரணைக்குப் பின்னர் சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனக்கு சிறப்புக் குழந்தை உள்ளதால் அவனைக் கவனிக்க வேண்டும் எனக் கூறி, அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுதாக்கல் செய்தார். அதில் அவருக்கு நிபந்தனைப் பிணை விடுவித்தல் கிடைத்தது.
அதன்படி, அவர் எழும்பூர் காவல்நிலையத்தில் அன்றாடம் கையெழுத்திட வேண்டும்.
இந்நிலையில் அவர் புழல் சிறையிலிருந்து முறைப்படி இன்று மாலையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் ஊடகத்தினரிடம் பேசிய அவர், தனக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். அப்போது, சிறு குரலாக இருந்த தன்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என வெடிப்புச் சிரிப்புடன் கூறினார்.