செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு- எடப்பாடி அறிவிப்பு!

எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்
Published on

அ.தி.மு.க.வில் நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனக் குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். 

சற்றுமுன்னர் அவர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்தால்தான் எடப்பாடி பழனிசாமியின் பயணத்தில் இணையமுடியும் என செங்கோட்டையன் அவருக்கு 10 நாள் கெடுவும் விதித்திருந்தார்.

அதற்கு தேனி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பரப்புரையில் இருந்த பழனிசாமி பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலையில்தான் இந்த விவகாரத்தில் அவரின் நிலைப்பாடு வெளிவந்துள்ளது.

வழக்கமாக, தனக்கு எதிராகக் கருத்து கூறியவர்களை உடனடியாகவோ மறுநாளோ கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கிவிடுவது பழனிசாமியின் வாடிக்கையாக இருந்துவருகிறது.

இப்போது, செங்கோட்டையன் வகித்துவந்த அமைப்புச்செயலாளர், மாவட்டச்செயலாளர் பதவிகளிலிருந்து மட்டும் அவரை நீக்கியுள்ளார்.

செங்கோட்டையன் பதவிகள் பறிப்பு
செங்கோட்டையன் பதவிகள் பறிப்பு
logo
Andhimazhai
www.andhimazhai.com