செந்தில் பாலாஜி கைது! மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அனுமதி!

செந்தில்பாலாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்
செந்தில்பாலாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்
Published on: 

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் அதிகாலை இரண்டு மணி அளவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் நெஞ்சுவலி என்று சொன்னதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரைப் பார்த்துவிட்டு வந்த அமைச்சர் சேகர்பாபு, அவர் சுயநினைவின்றி உள்ளதாகவும் செந்தில்பாலாஜி விசாரணையில் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் காதுப்பகுதியில் வீக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார். அவரைச் சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு திமுக அரசு அஞ்சாது என்றும் நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி கட்சியினர் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com