செந்தில் பாலாஜி தொகுதியில் பணம்- அ.தி.மு.க. வேட்பாளர் தர்ணா!

செந்தில் பாலாஜி தொகுதியில் பணம்- அ.தி.மு.க. வேட்பாளர் தர்ணா!
Published on

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பணம் கொடுத்து வாக்கைப் பெறும் முயற்சி நடப்பதாகப் பிரச்னை எழுந்துள்ளது. 

அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். 

ஆனால் புகாரின்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பாக பணம் கொடுப்பவர்களைப் பிடித்துக்கொடுத்தாலும் ஒரு நடவடிக்கையும் இல்லை என்றும் அ.தி.மு.க.வினர் குறைகூறுகின்றனர். 

கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை இரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அம்மன் அர்ஜூனன் தலைமையில் அக்கட்சியினர் இன்று காலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com