சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை!

holiday for rain
பள்ளிகளுக்கு விடுமுறை(மாதிரிப்படம்)
Published on

புயல் மழை காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

டித்வா புயல் காரணமாக சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொல்லும்படியாக மழை பெய்யவில்லை. ஆனால் புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு இழக்கும்போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 

எதிர்பார்ப்புக்கு மாறாக புயல் வலுவிழந்தபோதும் சென்னை, சுற்றுவட்டாரங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக, இன்று நகரிலும் சுற்றுவட்டாரங்களிலும் கனத்த மழை தொடர்ந்து பெய்தது. 

மெட்ரோ இரயில் பணி நடந்துவரும் நிலையில் ஏற்கெனவே சாலைகள் குண்டும்குழியுமாக இருக்கும் நிலையில், பல இடங்களிலும் மழை நீர் தேங்கியது.

வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று இரவு முதல் கன மழை, அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் நாளை 2ஆம் தேதியன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என தனித்தனியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.  

logo
Andhimazhai
www.andhimazhai.com