
ஈழத்து மூத்த கவிஞரும் திரைப்பட நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன் சென்னையில் வசித்துவருகிறார். பொங்கல் விழாவை முன்னிட்டு தனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து மாநகராட்சித் தரப்பில் முறையிட முயன்றும் பலன் ஏதும் கிடைக்கவில்லை என்று தன் சமூக ஊடகப் பக்கத்தில் முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளார்.
அதன் விவரம்:
”சென்னை நகரத்துக்கு மேயர் பிரியா ராஜன் அவர்களுக்கும் அதிகாரிகள் கவனத்துக்கு என்ற தலைப்பில்
*
பெசன்நகர் இதய நோய் உள்ள முதியவர்கள் பலர் வசிக்கும் பிரதேசம். கடந்த நான்கு நாட்களாக குப்பை கொட்டினால் அபராதம் என்ற விளம்பரத்தை தொடற்சியாக காதடைக்கும் சத்தத்துடன் ஒலிபெருக்குகிறார்கள். எனக்கே மாரடைப்பு வெந்துவிடுமோ என அச்சமாக உள்ளது.
*
நான்கு நாட்களாக மாநகர அலுவலர்கள் யாரையும் தொலைபேசியில் தொடபுகொள்ள முடியவில்லை. முகநூலிலும் சென்னை மேயர் பிரியா ராஜன் அவர்களுக்கும் விண்ணப்பங்கள் செய்தேன், பதில் இல்லை, இப்பவும் தொடர்ந்து பொறுப்பற் காதடைக்கும் வகையில் அதிக ஒலி மாசு கிளப்பும் விளம்பரங்கள் பெசன்ற் நகர் கடற்கரையில் இருந்து ஒலிபரப்ப படுகிறது.
*
ஒலி மாசினால் எனக்கே மாரடைப்பு வந்துவிடுமோ என அஞ்சுகிறேன்.
_
யாராவது மநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினையை எபுரியும்படி எடுத்துச் சொல்வீர்களா?
- வ.ஐ,ச,ஜெயபாலன் கவிஞன் நடிகன்.”