சென்னைக்காரர்கள் மட்டுமே... புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!
சென்னையில் நாளை நடைபெறவுள்ள த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் இந்த மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமை நிலையச் செயலக அறிவிப்பு விவரம் :
”சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (28.01.2026, புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே அழைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட செயல்வீரர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும்.” என்று ஆனந்த் கூறியுள்ளார்.

