சென்னைக்கு அருகே 6 தளங்களில் புது மருத்துவமனை!

சோழிங்கநல்லூர் புது மருத்துவமனை
சோழிங்கநல்லூர் புது மருத்துவமனை
Published on

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூரில் 66.50 கோடி ரூபாயில் 6 தளங்களுடன், 100 படுக்கைகள், விபத்து - அவசரச் சிகிச்சை பிரிவுடன் புறநகர் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி கட்டடத்தைத் திறந்துவைத்தார்.

மொtத்தம் 66.50 கோடியில் 1,01,773 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், 5 தளங்களுடன், 100 படுக்கை வசதிகளுடன் இந்தப் புறநகர் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் புற நோயாளிகள் பிரிவு, அவசரச் சிகிச்சை பிரிவுகளும், முதல் தளத்தில் மகப்பேறு சிகிச்சை பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளும்

இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ஆண்களுக்கான பொது மருத்துவம் ஆகிய பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தளத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி, ஆய்வகம், பெண்களுக்கான பொது மருத்துவம் ஆகிய பிரிவுகளும்,

நான்காம் தளத்தில் தீக்காய சிகிச்சைப் பிரிவு, அவசரச் சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளும்,

ஐந்தாம் தளத்தில் நீரிழிவு சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் என நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனையாக இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com