தமிழ் நாடு

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அவர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்துவரும் அபின் தினேஷ் மோடக், குற்றப்பிரிவு சிஐடி பிரிவின் கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
உள்துறைச் செயலாளர் மணிவாசன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆணையராக இருந்த அருண், மாற்றப்பட்டு, அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.