செப்டம்பர் கடைசியில் 3 நாள்கள் வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்!

வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்
வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்
Published on

வாரத்தில் 5 நாள்கள் வேலை என்பது முதலிய கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதில் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம், " இன்றைய வேலைநிறுத்தத்தில் சுமார் எட்டு லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள், மேலாளர்கள் பங்கேற்றுள்ளனர். மார்ச் 2024-ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வங்கி செயல்படும் முறையைக் கொண்டுவர (five-day banking week) அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே இந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய கோரிக்கையாகும்.” என்றார்.

“ தற்போது மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை நாள்களாகவும், மற்ற சனிக்கிழமைகள் பணி நாள்களாகவும் உள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதல் நேரம் பணியாற்ற நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதால், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாள்களாக அறிவிக்குமாறு கோரியுள்ளோம்.

அடுத்தகட்ட வேலைநிறுத்தம் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும். அப்போதும் தீர்வு காணப்படாவிட்டால், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும்." என்றும் சி.எச்.வெங்கடாச்சலம் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com