தமிழ் நாடு

தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் சங்கம்- பபாசி நடத்தும் சென்னைப் புத்தகக் காட்சி 49ஆம் ஆண்டாக வரும் ஜனவரி 7ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 19ஆம் தேதிவரை 13 நாள்கள் இந்தக் காட்சி நடைபெறும் என புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இடையில் வரும் பொங்கல் விடுமுறை நாள்களிலும் புத்தகக் காட்சி சந்தை இடைவெளி விடாமல் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
எனவே, பொங்கல் விழாவுக்காக ஊருக்குச் செல்பவர்கள் திரும்பவும் வந்து புத்தகங்களைப் பார்வையிடவும் வாங்கிச்செல்லவும் வசதியாக 19ஆம் தேதிவரை நடத்தப்படுகிறது என்றும் நிர்வாகிகள் கூறினர்.