
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:
”97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?
வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே?
இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்!
ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை SIR ரத்து மீண்டும் வாக்குச்சீட்டு முறை
உட்பட்ட கோரிக்கைகளுடன் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன்.
வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை!
ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும்.
நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும்!” என்று முர்முவுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.