ஜவ்வாது மலை மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம்- பிடிபட்ட 6 வன அதிகாரிகள்!

ஜவ்வாது மலை மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம்- பிடிபட்ட 6 வன அதிகாரிகள்!
Published on

ஜவ்வாது மலையில் வசித்துவரும் மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடிவரை லஞ்சம் வாங்கியுள்ளதாக வனத் துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்தன.

அதையடுத்து, துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

அந்த விசாரணையில், வனத் துறையினர் மீதான புகார்கள் உண்மை எனத் தெரியவந்தது.  

அதன்படி, மூன்று வனச்சரக அலுவலர்கள் உட்பட ஆறு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 

அரசுக்குச் சொந்தமான நிலத்தைத் தனி நபர்களுக்குப் பட்டா செய்து தரப்போவதாக மிரட்டி இவர்கள் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்று இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com