தமிழ் நாடு

வரும் 6ஆம்தேதி நடைபெற இருந்த அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு- ஜாக்டோஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தம் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முற்பகல் வெளியிட்டுள்ள அறிவிப்பால் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக ஜாக்டோஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்று அனைத்து சங்கங்களின் தலைவர்களும் கோட்டையில் அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்துவருகின்றனர்.
முதலமைச்சருக்கு அவர்கள் இனிப்புகளையும் புத்தகங்களையும் வழங்கி மகிழ்ந்தனர்.
உடன் அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு இருவரும் இருந்தனர்.