ஜெ. தீபலட்சுமியின் மொழியாக்கத்தில் சேகுவேரா நூல் வெளியீடு!

J DeepaLakshmi book function
ஜெ.தீபலட்சுமி மொழிபெயர்த்த சே குவேரா நூல் வெளியீடு
Published on

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஜெ. தீபலட்சுமி மொழிபெயர்ப்பில் ‘சேகுவேரா ஒரு போராளியின் வாழ்க்கை’ என்கிற புத்தகம் சென்னையில் இன்று வெளியிடப்பட்டது.

ஆங்கிலத்தில் ஜான் லீ ஆன்டர்சன் எழுதிய இந்த நூல், தமிழில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள இந்த நூலை, வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார். எழுத்தாளர் கோவை இரா.முருகவேள், தீபலட்சுமியின் கணவர் அலாய்சியஸ் ஜோசப் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், ஜா.மாதவராஜ், பா.ஜீவசுந்தரி, நாடகக்கலைஞர் எஸ்.மிருதுளா, மொழிபெயர்ப்பாளர் ஜெ.தீபலட்சுமி ஆகியோர் பேசினர். 

ஜெ.தீபலட்சுமி மொழிபெயர்த்த சே குவேரா நூல் வெளியீடு
ஜெ.தீபலட்சுமி மொழிபெயர்த்த சே குவேரா நூல் வெளியீடு
ஜெ.தீபலட்சுமி மொழிபெயர்த்த சே குவேரா நூல் வெளியீடு
ஜெ.தீபலட்சுமி மொழிபெயர்த்த சே குவேரா நூல் வெளியீடு

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com