தமிழ் நாடு

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் சித்திரவதைக் கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள ஒன்பது காவல்துறையினருமே குற்றவாளிகள்தாம் என்று தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தண்டனை விவரம் மட்டும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.