தமிழ் நாடு
தொலைக்காட்சி முன்னாள் பிரபலமான ஜேம்ஸ் வசந்தன் நடிகர் விஜய்யின் இரசிகள், கட்சியினடைப் பற்றி அவமதித்துப் பேசிவந்த நிலையில், அவருடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் வசிக்கும் அவர், நேற்று வார இறுதியில் உணவகம் ஒன்றுக்குச் சென்றார். வீட்டுக்குத் திரும்ப காரை நோக்கிச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவருடைய காரின் பின்னிருக்கை கண்ணாடி உடைக்கப்பட்டு உடைப்பதற்குப் பயன்படுத்திய கல் இருக்கையின் உள்ளே இருந்துள்ளது.
ஆனால் உடனடியாக இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்க விரும்பாத வசந்தன், வீட்டிற்குச் சென்று அதைப் பற்றிய காணொலி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
அதையடுத்து, தகவல் அறிந்து காவல்துறையினர் அவரைத் தொடர்புகொண்டு கேட்டபிறகு, ஜேம்ஸ் புகார் அளித்துள்ளார்.