தமிழ் நாடு
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீர்வளத்துறை அமைச்சர்துரைமுருகன் இதுதொடர்பாக அரசின் தனித் தீர்மானத்தை அவையில் கொண்டுவந்தார். இதன் மீது விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பேசினர்.
பின்னர், ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை இரத்துசெய்யவும், மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் எந்தச் சுரங்க அனுமதியையும் வழங்கக்கூடாது என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.