டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் மனு!

Published on: 

மாவட்ட ஆட்சியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் விக்னேசைக் கைதுசெய்ய வேண்டும் என டி.ஜி.பி.யிடம் மனு அளிப்பதற்காக அவரது அலுவலகத்துக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலையில் சென்றார்.

ஆனால், உதயநிதி தன் அலுவலகம் வரும்நிலையில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அங்கு இல்லை. அருகில் உள்ள திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்காகச் சென்றுவிட்டார்.

அதையடுத்து, அலுவலகத்தில் தன் மனுவைக் கொடுத்துவிட்டு உதயநிதி வெளியே வந்தார். 

மைய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் ஆகியோர் உடனிருந்தனர்.