டிவி தொகுப்பாளர் பரத் மாரடைப்பால் மறைவு!

Published on: 

மாலைமுரசு தொலைக்காட்சியின் முக்கியமான விவாதத் தொகுப்பாளர் பரத் இன்று காலையில் சென்னையில் காலமானார்.

48 வயதான அவர் வழக்கம்போல இன்று காலையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, மயங்கி விழுந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அவசர ஊர்திக்குத் தகவல் தெரிவித்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பரத்துக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

மறைந்த பரத்துக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். 

முன்னதாக, இவர் நியூஸ்டுடே மாலை நாளேட்டில் திரைப்படம், விளையாட்டு எனப் பலதரப்பட்ட செய்திகளையும் திரட்டி எழுதிவந்தார். அங்கிருந்து மாலைமுரசு ஊடகத்தில் சேர்ந்தார். 

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கும் கலை என்பவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்த தகவலைப் பற்றி நண்பர்களுடன் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்; இன்று அவரே காலமாகிவிட்டாரே என விவாதப் பங்கேற்பாளர்கள் இரங்கல் செய்தியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.