டெல்லிக்குப் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி- அமித்ஷாவுடன் பேச்சு!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிசெய்வதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷாவுடன் பேசுவதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

முன்னதாக, மைய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழகத்துக்கு வருவதாக இருந்தது. இன்றே இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். மாலை அல்லது இரவில் அவர் அமித்ஷாவைச் சந்தித்து தொகுதிப் பங்கீட்டை முடிவுசெய்யலாம் என இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் பழனிசாமி டெல்லிக்குச் சென்று அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com