தண்ணீர்கூடத் தராமல் 5 மணி நேரம் வேனில் சுற்ற விடுகிறார்கள்!

தண்ணீர்கூடத் தராமல் 5 மணி நேரம் வேனில் சுற்ற விடுகிறார்கள்!
DELL
Published on

ஐந்து மணி நேரமாக தண்ணீர் சாப்பாடு தராமல் கைது செய்த வாகனத்திலேயே சுற்றி சுற்றி வருகிறார்கள் என்று கைதுசெய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர். 

பணி நிரந்தரம்,தனியார்மய எதிர்ப்புஆகியவற்றை வலியுறுத்தி நான்கு மாதங்களுக்கும் மேல் சென்னை,தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இன்று முதலமைச்சருக்கு மனு தரும் போராட்டத்தையொட்டி நூற்றுக்கணக்கானவர்கள் காலையில் கைதுசெய்யப்பட்டனர். 

முதலில் அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதில்லாமல், போலீசு வாகனனங்களில் அலைக்கழிக்கப்பட்டனர் எனப் புகார்கள் எழுந்தன. அதையடுத்து, அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த இடங்கள் விவரம்: 

1. ஸ்ரீ உதய மஹால், போரூர், ராமாபுரம்

2. எம்எம்டிஏ சமூக நலக்கூடம், வேளச்சேரி

3. எம்எம்டிஏ சமுதாய நலக்கூடம், அரும்பாக்கம்

4. நாகரத்தினம்மாள் திருமண மண்டபம், வெஸ்ட் மாம்பலம்

5. பார்வதி மண்டபம், வளசரவாக்கம்

6. தியா கல்யாண மண்டபம், புழல்

7. சின்னச்சாமி மண்டபம், முகப்பேர்

8. சக்கரவர்த்தி லலிதா பேலஸ், கொளத்தூர் ப்லை ஓவர்

9. கம்யூனிட்டி ஹால், சிஐடி நகர், நந்தனம்

10. திருவான்மியூர் பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடம்

11. ஹேமா மஹால், தரமணி

12. ஸ்ரீ விஜயலட்சுமி மஹால், மடிப்பாக்கம்

13. ஏகே மஹால், விருகம்பாக்கம்

14. சாய் உதய மஹால், சாந்தி நகர், ராமாபுரம்

15. பெருநகர சென்னை மாநகராட்சி சமூக நலக்கூடம், கோட்டிவாக்கம்

16. சமுதாய நலக்கூடம், சாலிகிராமம்

17. வள்ளலார் இல்லம், கோடம்பாக்கம்

18. ராமர் கோவில், நந்தம்பாக்கம்

19. கேசிடி மஹால், நங்கநல்லூர்

20. தந்தை பெரியார் சமுதாய நலக்கூடம், அண்ணா நகர்

21. ஆனந்த மஹால், ஆதம்பாக்கம்

22. அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் மஹால், பெருங்குடி

23. குறுங்காலிஸ்வர சுவாமி திருமண மண்டபம், கோயம்பேடு

24. ஆதம்பாக்கம் சிக்னல்

இதில் கடைசியாகக் கிடைத்ததகவலின்படி ஆதம்பாக்கத்தில் கைதானவர்களுக்கு குடிக்கத் தண்ணீர்கூடத் தராமல் 5 மணி நேரம் தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தியதாக போராட்டத்தை முன்னெடுத்துவரும் உழைப்போர் உரிமை இயக்கம் சாடியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com