தனிச் சின்னமா? - ம.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி

தனிச் சின்னமா? - ம.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி
Published on

தி.மு.க. கூட்டணியில் புதியதாகச் சேர்ந்துள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சி இன்று  தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியது. 

மஜக தலைவர் மு.தமிமுன் அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் எம்.முஹம்மது நாசர், பொருளாளர் கேப்டன். சையது அஹமது ஃபாருக், இணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றனர்.

தி.மு.க. குழுவில் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அ.ராசா, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பேசினர். 

அப்போது, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தொகுதிகளின் விருப்ப பட்டியலும், அது சார்ந்த கோரிக்கைகளும் கையளிக்கப்பட்டது; பேச்சுவார்த்தை ஒரு சடங்காக இல்லாமல், மகிழ்ச்சிகரமான உரையாடலாக அமைந்தது; பேச்சுவார்த்தை சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று தமிமுன் செய்தியாளர்களிடம் பேசினார். 

தனிச்சின்னத்தில் போட்டியிடுவீர்களா எனக் கேட்டதற்கு, அதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூடி இன்று மாலை முடிவுசெய்வோம் என்றார் அவர். 

சந்திப்பின்போது, தமிமுன் அன்சாரி தான் எழுதிய 'சட்டசபையில் சமூக நீதி குரல்' என்ற நூலை தி.மு.க.வினர் அனைவருக்கும் அளித்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com