தமிழகத்தின் 6 மேலவை எம்.பி.கள் இன்று பதவியேற்பு!

6 மாநிலங்களவை உறுப்பினர்கள்
6 மாநிலங்களவை உறுப்பினர்கள்
Published on

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்கள் இன்று காலையில் பதவியேற்றுக்கொண்டனர். 

அவையின் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் முன்னிலையில் தே.மு.தி.க.வின் எல்.கே. சுதீஷ் கடவுளின் பெயரால் தன் பதவியை ஏற்றுக்கொண்டார். 

தி.மு.க.வின் திருச்சி சிவா, அ.தி.மு.க.வின் தம்பிதுரை ஆகியோர் மீண்டும் உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். 

தி.மு.க. செய்தித்தொடர்புச் செயலாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், பா.ம.க.வின் தலைவர் அன்புமணி, காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்டோபர் திலக் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com