தமிழ்நாட்டு அரசின் அனைத்துத் துறைகளின் தலைமை அலுவலகங்களும் இயங்கும் கோட்டை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டடத்தில் இன்று காலையில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் பத்து மாடிகளிலிருந்தும் கீழே இறங்கி ஓடிவந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதல் மாடியில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் தரையில் விரிசல் விட்டதைப் அங்குள்ள ஊழியர்கள், அலுவலர்கள் பார்த்து பீதியடைந்தனர். அங்கிருந்த தரை டைல்களும் உடைந்தன.
ஏதோ ஆபத்து நேர்ந்துவிடுமோ என உடனடியாக அடித்துப்பிடித்து ஊழியர்கள் அனைவரும் கட்டடத்தை விட்டுக் கீழே இறங்கி ஓடி வெளியே வந்தனர். கூட்டமாக இப்படி ஊழியர்கள் ஓடிவருவதைப் பார்த்ததும் மற்ற மாடிகளில் இருந்தவர்களும் அச்சத்தில் கீழே இறங்கி வந்தனர்.
நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முன்பாக அவர்கள் திரண்டதால், பதற்ற நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்துவந்த பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள் தளம் உடைந்த இடத்தைப் பார்வையிட்டனர்.