
விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனைகளுடன் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, விஜய் ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சியிடம் த.வெ.க. ஆதரவு கோரியிருந்தது. அதற்கு இசைவாக காங்கிரஸ் மேலிடமும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று முற்பகலில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அதன்பின்னர் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட அறிக்கையில், நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் அமைச்சரவையில் பங்கு என்பதை நேரடியாகக் கூறாத நிலையில், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களவைத் தேர்தல் ஆகியவற்றிலும் இந்த உறவு தொடரவேண்டும் என்றும்,
எந்த வகையிலும் மதவாத சக்திகளுடன் கூட்டு வைக்கக்கூடாது என்றும் காங்கிரசின் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.