முதலமைச்சர் விஜய்யின் த.வெ.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் மின்வெட்டு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் த.வெ.க.வில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.
திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இணைந்தனர்.
கட்சி இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவும் ஆனந்தும் புதியவர்களுக்கான கொடியை வழங்கிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அங்கு மின்சாரம் நின்றுபோனது.
அது நேரலையாக ஊடகங்களில் ஒளிபரப்பாகிய நிலையில் மின்வெட்டும் உடனடியாகச் செய்தியானது.
இதை எடுத்துப்போட்டு சமூக ஊடகங்களில், த.வெ.க. எதிர்ப்பாளர்கள் கண்டபடி விமர்சித்து வருகின்றனர். இதுவும் தி.மு.க. கைவரிசை என மின் துறை அமைச்சர் சொல்வாரோ என்றும் சமூக ஊடக வாசிகள் கேள்விகணைகளை வீசியபடி உள்ளனர்.