த.வெ.க. மாவட்டச்செயலாளர் மனுவும் தள்ளுபடி!

கரூர் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்
கரூர் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்
Published on

கரூர் விஜய் கூட்ட நெரிசல் மரணங்கள் வழக்கில் முன்பிணை வழங்குமாறு த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். 

இன்று முற்பகல் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதா என நீதிபதிகள் அவர் தரப்பை சரமாரியாகக் கேள்விகள் கேட்டனர். 

அதற்கு அவர் தரப்பில் உரிய பதிலைக் கூறமுடியவில்லை. 

மேலும், காவல்துறையின் சார்பில் வாதிட்டபோது, சதீஷ்குமார் மீது தனியார் மருத்துவமனையைத் தாக்கிய வழக்கு உட்பட எட்டு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் சதீசின் முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்தனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com