நடிகராக இருந்து அரசியல் கட்சித் தலைவர் அவதாரம் எடுத்துள்ள விஜய், இன்னொரு நடிகரான தாடி பாலாஜியைத் துணைக்கு அழைத்திருக்கிறார்.
இந்தத் தகவலை பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னையில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு விஜய் கட்சியினர் ஒரு பூஜை நடத்தினர். அதில் கலந்துகொண்ட நடிகர் பாலாஜி, பின்னர் ஊடகத்தினரிடம் பேசினார்.
அப்போது, “ மூன்று நாள்களுக்கு முன்னர் ஒரு நல்ல சேதி சொல்வதாகச் சொல்லியிருந்தேன். அதை இப்போது சொல்கிறேன். த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த வாரம் என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார். அதையடுத்து அவரை நேரில் போய்ப் பார்த்தேன். அப்போதுதான், விஜய் என்னை த.வெ.க. மாநாட்டில் வேலைபார்க்கச் சொல்லுமாறு அவரிடம் சொன்னதாக ஆனந்த் கூறினார். படங்களில் அவருடன் நடித்திருக்கிறோம். இப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.” என்று தாடி பாலாஜி தெரிவித்தார்.
சில மாதங்களாகவே தாடி பாலாஜி விஜய் ரசிகர் மன்றத்தினருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, விஜயைப் பாராட்டிப் பேசிவருகிறார்.
இந்தப் பின்னணியில் அவரின் நுழைவு த.வெ.க.வில் அதிகாரபூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது.