தமிழ் நாடு
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் பதவி காலியாக இருந்தது. அதில், கூடுதல் டிஜிபி நஜ்முல் ஹோடா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறைச் செயலாளர் கார்த்திக் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, இந்தப் பொறுப்பை சென்னை போலீஸ் ஆணையர் அமல்ராஜ் கூடுதலாக கவனித்துவந்தார்.
நஜ்முல்ஹோடா கவனித்துவந்த சிறப்பு நடவடிக்கைகள் கூடுதல்டிஜிபி பொறுப்பை, ஆயுதப்படை கூடுதல் டிஜிபி தினகரன் கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.