தி.மு.க. அணி- மாநிலங்களவை இடம் கேட்ட ம.தி.மு.க. !

தி.மு.க. அணி- மாநிலங்களவை இடம் கேட்ட ம.தி.மு.க. !
Published on

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க. சற்றுமுன்னர் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சை நடத்தியது. அப்போது, மாநிலங்களவை இடம் ஒன்றைக் கேட்டதாக ம.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழு தெரிவித்தது.

அறிவாலயத்தில் ம.ம.க. குழுவினரை அடுத்து, ம.தி.மு.க. குழுவுடன் தி.மு.க. தொகுதிப்பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. குழுத் தலைவர் கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் - கழக அவைத் தலைவர் அர்ஜூனராஜ், எத்தனை தொகுதிகள் கேட்டார்கள் எனும் கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவியபடி இருந்தார். அடுத்தடுத்த கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

மாநிலங்களவை இடம் கேட்கப்பட்டதா என்று கேட்டதற்கு, அது கோரிக்கையில் இடம்பெற்றிருந்தது என்றார் அவர்.

அடுத்தகட்டமாகவும் பேச்சு நடக்கும் என்றும் அப்போது எண்ணிக்கை பற்றி கூறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ம.தி.மு.க. தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்றும் அர்ஜூனராஜ் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com